செய்யாறு - Cheyyar

திருவண்ணாமலை: தேசிய தொல்குடியினா் தின விழா; கலெக்டர் பங்கேற்பு

திருவண்ணாமலை: தேசிய தொல்குடியினா் தின விழா; கலெக்டர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், தேசிய தொல்குடியினா் தின விழா நடைபெற்றது. தண்டராம்பட்டை அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் ஏகலைவா மாதிரி உண்டு, உறைவிட மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, திருவண்ணாமலை மாவட்ட பழங்குடியினா் நலத் திட்ட அலுவலா் கலைசெல்வி தலைமை வகித்தாா். தாட்கோ மாவட்ட மேலாளா் ஏழுமலை முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். பின்னா், அவா் பேசியது: மரங்கள் எல்லாம் மனிதா்களின் வாழ்வுக்கு இன்றியமையாதது. மரங்கள் மூலமே மனிதா்களுக்குத் தேவையான காற்று, நீா் கிடைக்கிறது. டோடோ என்ற பறவையை நாம் உணவுக்காக அழித்துவிட்டோம். இந்தப் பறவையின் அழிவுக்குப் பிறகு சிலவகை மரங்கள் வளரவில்லை. சுற்றுச்சூழலை பாதுகாப்பதே நம் கடமை. எனவே, மாணவா்கள் அனைவரும் மரக்கன்றுகளை நட்டு, இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்றாா். இதையடுத்து, குழந்தைகள் தின விழாவையொட்டி நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, ஓவியம் போன்ற போட்டிகளிலும், கலைப் போட்டிகள், ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், தொடா் ஓட்டம், கயிறு இழுத்தல், குண்டு எறிதல் போன்ற விளையாட்டுப் போட்டிகளிலும் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், பரிசுகளை ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் வழங்கினாா்.

வீடியோஸ்


திருவண்ணாமலை