தமிழகத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வந்தது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் விட்டு விட்டு சாரல் மழையாக துவங்கி கனமழை 1 மணி நேரம் மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதமான சூழலால் குளிர்ச்சியான காற்று நிலவி வருகிறது.