திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்துவரும் திருவத்திபுரம் நகராட்சி சார்பில் செய்யாறு தண்டரை அணைக்கட்டு பகுதியில் இருந்து தினமும் 20 லட்சம் லிட்டர் குடிநீர் செல்லும் பைப் லைன் இன்று(செப்.14) உடைந்து சாலையில் வீணாக நீரோடை போல் குடிநீர் செல்கிறது.
உடைந்த குடிநீர் பைப் லைனை திருவத்திபுரம் நகராட்சி நிர்வாகம் சீர் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.