
தி.மலை: பூத நாராயண பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை
திருவண்ணாமலை மாட வீதியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பூத நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை முதல் நாளை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இக்கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு குபேர வடிவில் காட்சி தரும் ஸ்ரீ பூத நாராயண பெருமாளுக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.