திருப்பதி லட்டு மாட்டுக் கொழுப்பு விவகாரம். ஆஞ்சநேயரிடம் முறையீடு.
திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்து கோயிலின் புனிதம் கெடுத்த கயவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டியும், கோவிலின் புனிதம் காக்க வேண்டியும் ஆஞ்சனேயரிடம் முறையிடும் போராட்டத்தில் இந்து முன்னணி இயக்கத்தின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் , திருவண்ணாமலை சின்ன கடை வீதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சூரத் தேங்காய் உடைத்து முறையிட்டு வேண்டிக்கொண்டார். உடன் இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.