
செய்யாறு: சுற்றுச்சூழல் விழிப்புணா்வு பேச்சுப் போட்டி..
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப் படை சார்பில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பேச்சுப் போட்டி நடைபெற்றது. செய்யாறு கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த பேச்சுப் போட்டி நிகழ்ச்சிக்கு தேசிய பசுமை படையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி, செய்யாறு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி, கொருக்கை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக செய்யாறு கல்வி மாவட்ட அலுவலர் செந்தில்முருகன் பங்கேற்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த பேச்சுப் போட்டியை தொடங்கி வைத்துப் பேசினார். இதில், அரசுப் பள்ளியில் இருந்து 90 மாணவர்கள் பங்கேற்றனர். பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் பரிசுத் தொகையை வழங்கினார். நிறைவில் பல்லி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகன் நன்றி கூறினார்.