செய்யாறு - Cheyyar

வீடியோஸ்


திருவண்ணாமலை
தவறவிட்ட நகையை மீட்டுக் கொடுத்தவருக்கு பாராட்டு
May 21, 2024, 11:05 IST/செய்யாறு
செய்யாறு

தவறவிட்ட நகையை மீட்டுக் கொடுத்தவருக்கு பாராட்டு

May 21, 2024, 11:05 IST
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் விஜயபாலன். இவர் தனது மனைவி கீதா மற்றும் பேத்தி வருணிகா ஆகியோருடன் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெறும் உறவினர் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, நேற்று முன்தினம் காலை காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்ட செய்யாறு அரசு பேருந்தில் பயணம் செய்தார். அப்போது பேத்திக்கு நிகழ்ச்சியில் அணிவதற்காக வைத்திருந்த நகையை பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்தார். நிகழ்ச்சிக்கு சென்று நகையை பார்த்தபோது அங்கு நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த பின்னர் போலீசில் புகார் அளித்தார். அவர்கள்அளித்த தகவலின் அடிப்படையில் பஸ் கண்டக்டர் வரதராஜன் பஸ்ஸில் உள்ள இருக்கையின் கீழ் பகுதியில் தேடும்போது நகைப்பெட்டி ஒன்று இருந்ததை பத்திரமாக எடுத்து வைத்திருந்தார். சேலத்தில் இருந்து நேற்று காலை வந்த கண்டக்டர் வரதராஜன், பணிமனை மேலாளர் (பொறுப்பு) ஜி. ராமகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து, நகையை தவறவிட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த விஜயபாலனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரை செய்யாறு பஸ் ஸ்டாண்டுக்கு வர வைத்து விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர், டாலர் வைத்த செயின், 2 வளையல்கள், மோதிரம் என 20 கிராம் தங்க நகைகள் அடங்கிய நகைப்பெட்டியை விஜயபாலனிடம் ஒப்படைத்தனர். தங்க நகையை மீட்டுக்கொடுத்த அரசு பஸ் கண்டக்டர் வரதராஜனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.