திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

66பார்த்தது
திருவண்ணாமலையில் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்து வருகின்றனர். இந்நிலையில் பெளர்ணமியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) லிமிடெட், விழுப்புரம் சார்பாக இன்று கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 250 சிறப்பு பேருந்துகளும், புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பண்ருட்டி, திருக்கோவிலூர், சிதம்பரம், விருதாச்சலம், திட்டக்குடி, வேலூர், ஆரணி, ஆற்காடு, காஞ்சிபுரம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 150 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே போன்று கிளாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை மற்றும் போளூர் ஆகிய ஊர்களுக்கு அதிக அளவில் பயணம் செய்வார்கள் என்பதால் அதற்கு ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக இன்று 335 சிறப்பு பேருந்துகளும், நாளை நவம்பர் 16ம் தேதி சனிக்கிழமை 165 பேருந்துகள் என மொத்தம் 500 சிறப்புப் பேருந்துகளை மேற்கண்ட வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை ஏற்பாடு செய்திடவும், பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி