திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் அறிக்கையில் அறிவித்த 181 -ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் குறித்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.