திருவண்ணாமலை: அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை மத்திய மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக வாக்காளர் பட்டியல் திருத்தல் முகாம் நடைபெற உள்ளதை குறித்து மாவட்ட கழகத்தின் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆரணி சட்டமன்ற உறுப்பினர்சேவூர் எஸ் ராமச்சந்திரன், திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளர்L. ஜெயசுதா ஆகியோ கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், மாவட்டச் சார்பு அணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், கிளை, வட்டக் கழக செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், முன்னாள் இன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் இன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.