திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த அடையபலம் ஊராட்சியில் ஏரியில் குளிக்க சென்ற 4 குழந்தைகள் நீரில் மூழ்கி பலியாகினர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தரணிவேந்தன் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று உயிரிழந்த குழந்தைகளுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி பின்னர் அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
நிகழ்வில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய நகர செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.