உடுமலைநகர திமுக செயலாளர் வாக்குச்சாவடியில் ஆய்வு
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. எதிர்நிலையில் இன்று உடுமலை சட்டமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளரும் மாநில சுற்றுச்சூழல் அணி நிர்வாகியுமான மணிசுந்தரம் மற்றும் திமுக நகர செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உடன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் குமார், உடுமலை நகர பாக ஒருங்கிணைப்பாளர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.