சோமவாரபட்டி: தண்ணீர் இல்லாமல் தவிக்கும் ஊராட்சியின் ஒரு பகுதி
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் இருக்கும் சோமவாரபட்டி ஊராட்சியில் எழில் கார்டன் பகுதியில் கிட்டத்தட்ட 14 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்கு 4 வீடுகளை தவிர எந்த வீட்டிற்கும் சொந்த குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. பொது குடிநீர் குழாய் ஒன்று அமைத்து அனைத்து குடும்பங்களும் குடிநீர் பெற்று வந்தனர். தற்போது அதுவும் துண்டிக்கப்பட்டு குடிநீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். பஞ்சாயத்து தலைவர் மற்றும் அலுவலக உதவியாளர் மற்றும் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பல முறை சொல்லியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது அந்த 4 வீடுகளின் சொந்த குடிநீர் இணைப்பையும் துண்டித்து இரண்டு வாரத்திற்கு மேலாகியும் தண்ணீர் விடாமல் தோண்டிய குழியை மூடாமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். தண்ணீர் இல்லாமல் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். சொந்த குடிநீர் இணைப்பிற்கான டெபாசிட் தொகையையும் வாங்க மறுக்கின்றனர். குடிக்கும் தண்ணீரை விலைக்கு வாங்கி குடிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை எப்படி கையாள்வது என தெரியாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.