பெங்களூருவில் கடந்த நவ. 15 அன்று ஒரு கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உள்ளே உடல் கருகிய நிலையில் ஒருவர் இறந்து கிடந்தார். முதலில் அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பதை அறிய முடியவில்லை. போலீஸ் விசாரணையில் அவர் பெயர் பிரதீப் (42) என்பதும் ஹோட்டல் நடத்தியதும் தெரிந்தது. ஹோட்டல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனம் உடைந்த பிரதீப் காருக்குள் உட்கார்ந்தபடி தீக்குளித்து தற்கொலை செய்தது உறுதியானது.