நடிகை நயன்தாரா இன்று (நவ.18) தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளையொட்டி நள்ளிரவு 12 மணியளவில் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் காதல் வாழ்க்கை, ‘‘Nayanthara: Beyond the Fairytale’’ என்ற திருமண ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. முன்னதாக இந்த ஆவணப்படத்தின் டிரைலரில் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு தனுஷ் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டதாக குறிப்பிட்டிருந்த நயன்தாரா, தனுஷை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.