திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பூர் சாலையில் குடிமங்கலம் நால்ரோடு பகுதி உள்ளது இந்த பகுதியில் இருந்து பொள்ளாச்சி உடுமலை தாராபுரம் திருப்பூர் செல்லும் பிரதான சாலைகள் சந்திக்கின்றன. மேலும் இங்கு அடிக்கடி விபத்துகளும் போக்குவரத்து நிகழ்ச்சிகளும் ஏற்பட்டு வந்தக் காரணத்தால் இங்கு தானியங்கி சிக்னல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்கப்பட்டது ஆனால் பல மாதங்களாக காட்சி பொருளாக உள்ளதால் பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்