திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் சிவசேனா கட்சியின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரே அவர்களின் 12 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி மற்றும் வீரவணக்க நாள் நிகழ்ச்சி திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் இளைஞர் அணி மாநில ஆலோசகர் ஹரிஹரன் பாலாஜி தலைமையில் அலங்கரிக்கப்பட்ட சிவசேனா கட்சியின் நிறுவன தலைவர் பால் தாக்கரேவின் திரு உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவசேனா கட்சி இளைஞர் அணி மாநில தலைவர் அக்ஷயா திருமுருக தினேஷ், அகில பாரத இந்து மக்கள் அமைப்பு நிறுவனர் விருகம்பாக்கம் தலைவர் சிவக்குமார் , சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் சத்யநாராயணன் ,
ராசப்பன், சிவசேனா கட்சியின் இளைஞரணி சார்பில் ஏராளமானோர் கொண்டு நிறுவனத் தலைவர் பால் தாக்கரே அவர்களுடைய திருஉருவ படத்துக்கு மணல் தூவி மரியாதை செலுத்தினர்
பின்னர் சிவசேனா கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் அக்ஷயா திருமுருக தினேஷ் செய்தியாளர்களிடம் பேசும் போது. உலகில் கிறிஸ்தவர்களுக்கு மற்றும் இஸ்லாமியர்களுக்கு தனித்தனியாக நாடுகள்
இருப்பது போன்று இந்துக்களுக்கு இந்து நாடு ஒன்று வேண்டும் என்பதே சிவசேன கட்சியின் நிறுவனத் தலைவரின் சித்தாந்த கொள்கையாகும் எனவே மத்திய அரசு இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்