சாலை விபத்தில் உயிரிழந்த நபரின் உடல் உறுப்புகள் தானம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. இவர், உடுமலையில் கடந்த 15ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(செப்.16) மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இன்று மதியம் அவரது உடலுக்கு உடுமலை மின் மயானத்தில் அரசு மரியாதை செலுத்தப்பட உள்ளது.