திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மெட்ராத்தி ஊராட்சியில் கன்னிமார் கருப்பராயன் கோவிலுக்கு செல்லும் பாதையும், கௌதம் ராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு செல்லும் நிலவியல் வண்டிப்பாதையும், ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் அதை மீட்க வேண்டும் எனவும் வருவாய்த்துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை, வருவாய் துறையினர் வட்டாட்சியர் பானுமதி தலைமையில் காவல் துறையினரின் உதவியுடன் நிலவியல் வண்டி பாதையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அ
ப்போது குறிப்பிட்ட நிலத்தைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் மீட்கும் பணி தடைபட்டது. இதனை அடுத்து இன்று காலை வருவாய் துறை அதிகாரிகள் குறிப்பிட்ட விவசாய நிலத்தில் வண்டி பாதையை ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்டிருந்த வேலியை அகற்றி நிலவியல் வண்டிப் பாதையை மீட்டனர். இதனால் கோவிலுக்குச் செல்லும் பாதை மீண்டும் கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.