திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியைச் சேர்ந்த வீரக்குமார். இவர் திருப்பூரில் இருந்து உடுமலை நோக்கி நேற்று(செப்.15) இரவு வந்துள்ளார். அப்போது பொன்னேரி பகுதியில் வந்தபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அப்போது திருப்பூரில் இருந்து இந்த உடுமலை நோக்கி வந்து கொண்டிருந்த முன்னாள் அமைச்சரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை ராதாகிருஷ்ணன் இந்த விபத்தை பார்த்ததும் தனது வாகனத்தை நிறுத்தினர்.
பின்னர் காரில் இருந்து இறங்கி அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்து காயமடைந்த வீரக்குமாரை மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் தலைமை மருத்துவரிடம் உரிய சிகிச்சை அளிக்குமாறு தொலைபேசியில் தெரிவித்தார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.