மடத்துக்குளம்: வேடப்பட்டி ஊராட்சி மீது பொதுமக்கள் புகார்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேடப்பட்டி ஊராட்சியில் திருமூர்த்தி கூட்டுக்குடிநீரீ திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முறைகேடாக சுடுகாடு பகுதியில் மழை நீர் சேகரிப்பு குட்டையை மூடி குடிநீர் வினியோகம் செய்வதற்கு கிணறு வெட்டுவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் எனவே சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.