திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதி கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது இந்த நிலையில் நால் ரோடு சந்திப்பு பகுதியில் உடுமலை பொள்ளாச்சி தாராபுரம் பழனி குமரலிங்கம் செல்லும் வாகனங்கள் அதிக அளவு வருகின்றன இந்த நிலையில் தானியங்கி சிக்னல் அமைத்து பல மாதங்களாகியும் தற்பொழுது பயன்பாட்டுக்கு வராமல் உள்ளதால் வாகனங்கள் தாறுமாறாக செல்லும் போது விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது எனவே தானியங்கி சிக்னல் பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.