உடுமலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு

64பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கேரளா மாநிலத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஓணம் பண்டிகை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடு வென உயர்ந்தது.
அதன் படி மல்லிகை ரூ. 500-ல் இருந்து ரூ. 2 ஆயிரமாகவும், முல்லை ரூ. 200-ல் இருந்து ஆயிரமாகவும், சாதிப்பூ ரூ. 300-ல் இருந்து ரூ. 600 ஆகவும், சம்பங்கி ரூ. 100-ல் இருந்து ரூ. 200 ஆகவும், கோழிக் கொண்டை ரூ. 60-ல் இருந்து ரூ. 100 ஆகவும், செவ்வந்தி ரூ. 150-ல் இருந்து ரூ. 200 ஆகவும், பட்டன் ரோஸ் ரூ. 150-ல் இருந்து ரூ. 300 ஆகவும், கலர் செவ்வந்தி ரூ. 200-ல் இருந்து ரூ. 400 ஆகவும், 20 எண்ணிக்கை கொண்ட ரோஸ் கட்டு ரூ. 160-ல் இருந்து ரூ. 300 ஆகவும், பன்னீர் ரோஸ் ரூ. 150-ல் இருந்து ரூ. 300 ஆகவும், செண்டு மல்லி ரூ. 40-ல் இருந்து ரூ. 120 ஆகவும் அதிகரித்தது. கேரள மாநிலத்தின் ஓணம் பண்டிகையுடன் சேர்த்து தமிழர்களின் விசேஷ நிகழ்வுகளான காதணி, சீமந்தம், பூப்பு நன்னீராட்டு விழா, திருமணம் புதுமனை புகுவிழா உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்வுகளும் நாளை அதிகளவில் நடைபெறுகிறது. பண்டிகை, சுபமுகூர்த்த நாள் ஒன்றிணைந்து வந்ததால் பூக்களுக்கு தேவை அதிகரித்து அதன் விலையும் கிடு கிடு உயர்ந்து உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி