எலையமுத்தூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம்

52பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி எலையமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட எஸ். ஆர். எம் மண்டபத்தில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது. முகாமை பொள்ளாச்சி தொகுதி எம். பி. கே. ஈஸ்வரசாமி, உடுமலை ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன், ஒன்றிய செயலாளர்கள் எஸ். கே. மெய்ஞானமூர்த்தி, செந்தில்குமார், உடுமலை தாசில்தார் சுந்தரம் ஆகியோர் இணைந்து தொடக்கி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து தும்பலபட்டி, கல்லாபுரம், எலையமுத்தூர், குருவப்ப நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு வருவாய் துறை சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்தனர். அதன் தொடர்ச்சியாக மனுக்களின் தன்மை குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் அங்கு பல்வேறு துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளில் மனு அளிக்க அறிவுறுத்தினார்கள்.

இந்த நிகழ்வின் போது ஊராட்சி மன்ற தலைவர்கள் மாரிமுத்து, முத்துலட்சுமி பழனிச்சாமி, காளியம்மாள்,
தாசில்தார்கள் விவேகானந்தன், கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பியூலா எப்சி பாய், சுப்பிரமணியம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள், ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள் சந்தோஷ்குமார், ஷேக்பரீத், ராமகிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி