திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் நேற்று இரவு திருப்பூர் தெற்கு மற்றும் கிழக்கு மாவட்ட தமிழ்
புலிகள் கட்சியின் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம்
மாவட்டச்செயலாளர்கள் திருப்பதி, காளிமுத்து தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்து பேசினார் பின்னர் அருந்ததியர் உள் ஒதுக்கீடு திர்ப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கொடுத்த மறுசீராய்வு மனுவை திரும்ப பெற வேண்டும் ,
உடுமலை கோட்டாட்சியர் கண்டிசன் நிலங்களுக்கு என் ஓ சி வழங்குவதற்கு தமிழ்
புலிகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது , உடுமலைப்பேட்டை சார்பதிவாளர் போலி பத்திரங்களை செய்து கொடுப்பதற்கு கடும் கண்டனம் , மற்றும் எதிர்வரும் 28- 9 -24 கோவையில் 3 சதவீத உள் ஒதுக்கீட்டை பெற்று தந்த திராவிட மாடல் அரசுக்கு பாராட்டு விழா நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் உடுமலை மடத்துக்குளம் தாராபுரம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்