திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி பகுதியில் சேர்ந்தவர் ரஜினி ரஞ்சித் , மண்பாண்ட கலைஞரார இவர் ரஜினியின் தீவிர ரசிகர்
ஆவார் ரஜினியின் ஒவ்வொரு திரைப்படமும் வெளியாகும் போது திரைப்படத்தில்வரும் முக்கிய கதாபாத்திரங்களின் சிலைகளை செய்து அசத்தியுள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்தின் தாய் தந்தை சிலைகளை வடிவமைத்து ரஜினியின் இல்லத்தில் கொடுத்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி போது ரஜினியின் ஜெயிலர் விநாயகர் சிலை வடிவமைத்து காட்சிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் தற்போது விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ரஜினியின் புதிய படமான வேட்டையன் விநாயகர் சிலையை தத்ரூபமாக செய்து அசத்தியுள்ள நிலையில் ரஞ்சித்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது