கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் வழியாக திருவனந்தபுரம், மதுரை, பாலக்காடு, திருச்செந்தூர், சென்னை, மேட்டுப்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இங்கே கோவை பயணிகள் ரயில் மட்டும் நின்று செல்கின்றது. எனவே அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க பொள்ளாச்சி எம்பி மற்றும் ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.