மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டிற்குள் போகாத அரசு பேருந்துகள்!

56பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேருந்து நிலையம் கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த நிலையில் கோவைக்கும், பழனிக்கும் அதிக அளவு விரைவு பேருந்துகள் உடுமலை வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. இவை பேருந்து நிலையத்திற்குள் செல்ல வேண்டும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அறிவுறுத்தியும், பிரதான சாலையில் நின்று பொதுமக்களை ஏற்றிச் செல்கின்றன. இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து பேருந்து நிலையத்திற்குள் பஸ்கள் செல்ல நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி