திருப்பூர் மாவட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில்
பதிவு செய்த கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆதரவற்ற பெண்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சுய தொழில் தொடங்க ஐம்பதாயிரம் மானியத் தொகை வழங்கப்படுகிறது.
வாரியத்தில் பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் 25 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுந்த சான்றிதழ் உடன் திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகம் மாவட்ட சமூக நல அலுவலகம் அறை எண் 36 இல் நேரில் சமர்ப்பிக்கலாம்
என திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.