
காங்கேயம் வெள்ள கோவிலில் புகையிலை பொருள் விற்ற 3 பேர் கைது
வெள்ளகோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது புதுப்பை சாலை நாச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் புகையிலை பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்ற வெள்ளகோவில் ராஜீவ் நகர் எஸ். தண்டபாணி (வயது 66) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 35 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் காங்கேயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அர்ச்சுனன் தலைமையில் போலீசார் நத்தக்காடையூர் குட்டறை பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் புகையிலை கடத்தியதாக விக்னேஸ்வரன் (வயது 34), தங்கவேல் (51) ஆகிய இருவரை கைது செய்து 44 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.