நெடுஞ்சாலை மையத் தடுப்பில் தீ வைத்த நெடுஞ்சாலை துறையினர்

73பார்த்தது
காங்கேயம் அடுத்த சிவன்மலை பகுதியில் சாலையின் மைய தடுப்பில் வளர்ந்து வறண்டு இருந்த புற்களுக்கு நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் தீ வைத்தனர். இதனால் இந்த சாலை இருபுறங்களிலும் தீ துகள்கள் பறந்து கொண்டு இருந்தது, மேலும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். மேலும் மாலை நேரம் என்பதால் பள்ளி வாகனங்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்வதில் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். மேலும் இந்த சாலையில் திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கு துணிகளை ஏற்றிக்கொண்டும், காங்கேயம் வெள்ளகோவில் பகுதிகளுக்கு தறி மற்றும் நூல் மில்களுக்கு துணிகள் ஏற்றிக் கொண்டும் அதிகப்படியான வாகனங்கள் செல்வது வழக்கம். மேலும் இது போல் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் சாலையின் மையப்பகுதியில் தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த சாலையானது காங்கேயம் முதல் படியூர் வரை 15 கிலோமீட்டர் உள்ளது அப்போது வழிநெடுகிலும் திவைப்பார்களா என கேள்வி எழுந்துள்ளது.


மேலும் அங்கே தீ வைத்துக் கொண்டிருந்த நெடுஞ்சாலை துறை ஊழியர்களிடம் கேட்டபோது எங்கள் மேல் அதிகாரிகள் தான் தீ வைக்கச் சொன்னார்கள் என்றும் மேலும் மைய தடுப்பு பகுதியில் உள்ள வெள்ளை மற்றும் கருப்பு கலர் பெயிண்ட் அடிக்க போவதாகவும் அதனால் இந்த புற்கள் இடையூறாக இருக்கும் எனவும் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி