காங்கேயம்: மாற்றுத்திறனாளியை தாக்கிய பாஜக நிர்வாகி கைது

73பார்த்தது
காங்கேயம்: மாற்றுத்திறனாளியை தாக்கிய பாஜக நிர்வாகி கைது
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அறுதொழுவு பகுதியைச் சார்ந்தவர் பூபதி வயது (46). இவர் ஒரு மாற்றுத்திறனாளி, இவர் அய்யாசாமி காலனியில் கறிகடை வைத்து நடத்திவருகிறார். அதே பகுதியைச் சார்ந்தவர் பாஜக உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு நகர துணைச் செயலாளர் செல்வகுமார் வயது (40). இவர் நேற்றுமுன்தினம் பூபதி நடத்திவரும் கறிகடைக்குச் சென்று, நீங்கள் கறிதுண்டுகளை போடுவதால்தான் அதிகமான நாய்கள் இந்தப் பகுதியில் சுற்றிவருகிறது என்று பூபதியை அடித்துள்ளார். இதனால் பூபதிக்கு தலையில் அடிபட்டு, காங்கயம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்பு பூபதி செல்வகுமார் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, செல்வகுமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி