செங்கப்பள்ளியில் தனியாருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் பணிபுரிய அரச்சலூர், சிவகிரி, முத்தூர் வெள்ளகோவில் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் நிறுவனத்தின் வேனில் சென்றுவருகின்றனர். இந்நிலையில் காலை வேலைக்கு சென்று விட்டு இரவு 9 மணியளவில் பணிமுடித்து தங்களது வீட்டிற்கு செல்ல அந்த தனியார் பனியன் நிறுவனத்தின் வேனில் செங்கப்பள்ளியில் இருந்து கிளம்பியுள்ளனர். காங்கேயத்திற்கு முன்னதாக சிவன்மலை அருகே ஜேசீஸ் பள்ளி நிறுத்தத்தில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் வேனில் இருந்த பெண்கள் அலறியடித்துக் கொண்டுவேனிற்குள்ளேயே விழுந்துள்ளனர். அருகே இருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலமாக காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. இதில் அம்சராணி 45, ரெமோ 37, பாக்கியம் 44, சரண்யா 34, காளியம்மாள் 44, முத்தம்மாள் 47, விஜயகாந்த்43, விஜி 45, தனலட்சுமி 30, , விசாலாட்சி, ஸ்ரீரங்கம்மாள் 47, சுகன்யா 25, பூபதி 26 ஆகியோர் காயமடைந்தவர்கள் விபத்து குறித்து காங்கேயம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காங்கேயம் பகுதியில் வேனில் பயணித்த ஊழியர்களுக்கு விபத்து ஏற்பட்டதை அறிந்த உறவினர்கள் கூட்டம் அதிகரிக்கவே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.