காங்கேயம் நகர பாஜக சார்பில் நகர தலைவர் சிவப்பிரகாஷ் தலைமையில், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மோகனப்பிரியா முன்னிலையில் காங்கேயம் பேருந்து நிலையத்திற்குள் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ. பி. முருகானந்தம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் காங்கேயம் வடக்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார், தெற்கு ஒன்றிய தலைவர் குரு தேவராஜ், மாவட்டதுணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் உட்பட 200க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.