காங்கேயம் தம்மரெட்டிபாளையம் ஊராட்சி, பணித்தலை காட்டை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 65). இவர் விவசாயம் செய்து வருவதோடு 30-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல் இரவு நேரத்தில் ஆட்டுப்பட்டியில் அடைத்துவிட்டு காலையில் மேய்ச்சலுக்கு திறந்துவிடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு பட்டியில் ஆடுகளை அடைத்து வைத்துள்ளார். பின்னர் காலையில் சென்று பார்த்தபோது 6 ஆடுகளை நாய்கள் கடித்து குதறியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி கால்நடை மருத்துவருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து இறந்த ஆடுகளை பரிசோதனை செய்து விட்டு உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் ஆடுகள் வளர்க்கும் தோட்டத்திலேயே விவசாயிகள் கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். விவசாயிகள் காங்கேயம் பகுதி அமைச்சர் மு. பெ. சாமிநாதன் வீட்டை முற்றுகையிடப்போவதாக அறிவித்தனர்.
இதனால் முத்தூரில் உள்ள அவரின் தோட்டத்திற்கும், வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது