திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அதிமுக நகர கழகம் சார்பில் திண்ணைப் பிரச்சார நிகழ்ச்சி இன்று இரவு நடைபெற்றது.
திருப்பூர் மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், காங்கேயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது இந்த திண்ணை பிரச்சார நிகழ்ச்சிக்கு அதிமுக கட்சியின் காங்கேயம் நகரச் செயலாளர் வெங்கு ஜி. மணிமாறன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் என். எஸ். என். நடராஜ் முன்னிலை வகித்தார். இதில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி வி. ஜெயராமன், மாநில அம்மா பேரவை இணைச்செயலாளர் குணசேகரன் EX. MLA ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் சி. லோகநாதன், அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் முருகவேல் @ ராமலிங்கம் , அப்பு @ பழனிச்சாமி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சி. கந்தசாமி, வர்த்தக அணி செயலாளர் SPN. பழனிசாமி உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து பலர் கொண்டனர். பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வீதி வீதியாக வழங்கப்பட்டது.