ஆஸ்துமா அல்லது சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் பெர்ஃப்யூம் பயன்படுத்தக்கூடாது. அதிக வாசனை கர்ப்பிணிகளுக்கு தலைவலி, குமட்டலை ஏற்படுத்தும். எனவே கர்ப்பிணிகள் பெர்ஃப்யூம் பயன்படுத்தக்கூடாது. சிறு குழந்தைகளின் சருமம் மிக மென்மையானது. எனவே குழந்தைகள் பெர்ஃப்யூம் பயன்படுத்தக்கூடாது. சருமப் பிரச்சனை உள்ளவர்கள், தலைவலி உள்ளவர்கள், ஒவ்வாமை இருப்பவர்கள் பெர்ஃப்யூம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.