

பிரபல பாடகி ஆண்ட்ரியா காங்கேயம் கல்லூரியில் ஆட்டம் பாட்டம்
காங்கேயம் கல்விக் குழுமத்தின் "எலன்ட்ரா" 2025 என்னும் விழாவானது இரண்டு நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு பிரபல நடிகையும் பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் நீல நிறத்தில் பாதி உடையணைந்து ஆட்டம் போட்டு பாட்டு பாடியதால் மாணவர்கள் உற்சாகமடைந்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் ஹரிஷ் கல்யாண் காங்கேயம் காளைகள் உலகின் புகழ்பெற்ற காளைகள் எனவும் புகழாரம் சூட்டினார். மேலும் தேங்காய் எண்ணெய்க்கு புகழ்பெற்ற பகுதி காங்கேயம் எனவும் விவசாயிகள் பற்றியும் உரையாற்றினார். காங்கேயம் கல்விக் குழுமத்தில் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி, மற்றும் வணிகவியல் கல்லூரி, மற்றும் மருந்து அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய மூன்று கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. எலன்ட்ரா என்னும் நிகழ்வானது மாணவர்களின் அறிவு மற்றும் அவர்களது திறமையை வளர்க்கும் வகையில் நடத்தப்படுகின்ற நிகழ்வாகும். இதில் மாணவர்களின் திறமையை வளர்க்கும் விதமாக பலவிதமான போட்டிகள் மற்றும் நிகழ்வுகள் நடைபெற்றது. மற்ற கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த நிகழ்ச்சியின் போது 3000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பொதுமக்கள் ஆசிரியர் பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.