ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியாது என்று கூறி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? களைகளும், பயிர்களும் ஒன்றாக விளைந்து வெள்ளாமை ஆகுமா? பதவி, பணத்துக்காக கட்சியை காட்டி கொடுக்க இருந்தவர்களின் கனவுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டன. விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.