"சர்வாதிகாரிகளுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை" - அமைச்சர் ரகுபதி
நெல்லையில் நேற்று (நவ.14) செய்தியாளர்களிடம் பேசிய நாதக சீமான், "ஒரு நேர்மையாளன் சர்வாதிகாரியாகத்தான் இருக்க முடியும்! கொம்பாதி கொம்பனாக இருந்தாலும் வெளியே போ” என்றார். இந்நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டியில், “சர்வாதிகாரிகளுக்கு தமிழ்நாட்டில் ஒருபோதும் இடம் இல்லை. அப்படி யாரேனும் சொன்னால் அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என தெரிவித்துள்ளார். நன்றி: நியூஸ் 18