மன்னிப்பு கேட்ட பிறகும் நடிகை கஸ்தூரியை கைது செய்ய தமிழக போலீஸ் துடித்துக் கொண்டிருப்பது நல்லது கிடையாது என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் இன்று (நவ., 15) செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஸ்தூரியை கைது செய்ய காட்டும் அவசரத்தை மற்ற வழக்குகளிலும் போலீஸ் காட்ட வேண்டும் என்றார். தெலுங்கு மக்கள் குறித்த கஸ்தூரியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 தனிப்படை அமைத்து கஸ்தூரியை தேடி வருகின்றனர்.