முசிறி தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிமுக திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்து பூத் கிளை அமைப்பது தொடர்பாக ஆலோசனை வழங்கினார். அதன்படி முசிறி நகரில் உள்ள 27 பூத்துகளுக்கு தனி கிளை அமைக்க ஆலோசனை வழங்கினார்.
அதன்படி ஒவ்வொரு கிளைகளும் தலைவர், செயலாளர் உள்ளிட்ட 9 பேர் கொண்ட கிளை அமைத்து அதனை நகரச் செயலாளர் எம். கே. சுப்பிரமணியன் வாயிலாக தன்னிடம் சமர்ப்பிக்கவும் கூறினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் என். ஆர். சிவபதி, எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா சின்னசாமி, முக்கிய நிர்வாகிகள் ரவிச்சந்திரன், ஜெயம் நெடுமாறன், ஸ்வீட் ராஜா, ஆனந்த் மதன், பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.