கர்ப்பிணியை ஏற்றிச் சென்றபோது வெடித்து சிதறிய ஆம்புலன்ஸ்

53பார்த்தது
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானில் கர்ப்பிணி மற்றும் அவரது இரண்டு உறவினர்களை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் வேகமாக சென்றுள்ளது. அப்போது, என்ஜினில் இருந்து புகை வருவதை கவனித்த ஓட்டுநர், உடனடியாக இறங்கி கர்ப்பிணி மற்றும் உறவினர்களை அங்கிருந்து வெளியேற்றினார். அடுத்த நொடியே ஆம்புலன்ஸில் தீ பரவிய நிலையில் அதில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியது. நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

நன்றி: தினமணி

தொடர்புடைய செய்தி