முசிறி அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து - மாணவன் காயம்
திருச்சி மாவட்டம், முசிறியில் தனியார் (ஜயேந்திர வித்யாலயா சி. பி. எஸ். இ) பள்ளி இயங்கி வருகிறது. நேற்று மாலை பள்ளி முடிந்து தண்டலை கிராமத்திற்கு புறப்பட்டு செல்லும் வேனில் சுமார் 30 மாணவ, மாணவிகள் அமர்ந்து சென்றுள்ளனர். வேனை தண்டலைபுத்தூர் கிராமத்தை சேர்ந்த கமால்பாசா முகமது சாலிஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அப்போது ராக்கம்பட்டி கிராமத்தில் சென்று கொண்டிருந்த பள்ளி வேனின் சக்கரம் சாலையை விட்டு கீழே இறங்கியதில் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தண்டலை கிராமத்தைசேர்ந்த பிரியதர்ஷன் என்ற இரண்டாவது படிக்கும் மாணவன் காயம் அடைந்தான். காயமடைந்த மாணவன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.