தெலங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீடியோவில், இடிந்து விழுந்த ஆற்று மேம்பாலத்தை ஆபத்தான முறையில் நபர் ஒருவர் கடக்கிறார். அதன்படி, உடைந்த மேம்பாலத்தை பைப் மூலம் அவர் கடக்கிறார். கீழ் பகுதியில் அதிகளவில் தண்ணீர் இருக்கும் நிலையில் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் அவர் செல்கிறார்.