திருச்சி மாவட்டம் முசிறியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர்குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்புமனித சங்கிலி போராட்டம் நடத்தினர். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒன்றிய அரசு அங்கன்வாடி திட்டத்திற்கு வழங்கக்கூடிய நிதியை குறைக்க கூடாது, அனைத்து மையங்களுக்கும் அரசு கட்டிடம் கட்டித் தர வேண்டும், மையங்களில் அடிப்படை வசதி உறுதிப்படுத்த வேண்டும், மையங்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள், உணவு சமைத்திட தேவைப்படும் பாத்திரங்கள் வழங்க வேண்டும், என்பதை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.