சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், மருத்துவர் பாலாஜி நேற்று (நவ.13) தாக்கப்பட்டார். இதற்கு, பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் மருத்துவ சங்கம் சார்பில் மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மருத்து சேவை பாதிக்காது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.