கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட 11 தாபாக்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியது. 11 தாபாக்களுக்கு சீல் வைக்க கோவை மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்திருந்தார். இந்த தாபாக்களில் சட்டவிரோதமாக டாஸ்மாக் மதுவை வாங்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பீர், பிராண்டி உள்ளிட்ட மதுபானங்களை அங்கு வரும் வாடிக்கையாளர்கள் அதிக விலைக்கு வாங்கி அருந்தி வந்தனர்.