சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் நேற்று மருத்துவர் பாலாஜி என்பரை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த மருத்துவர் பாலாஜிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் மருத்துவரை நேரில் சந்தித்தார். அப்போது மருத்துவர் தான் நலமாக இருப்பதாகவும், தனக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் சகஜமாக பேசினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.