சென்னை போரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சிவகுமார் என்ற 74 வயதான முதியவர் தனது 70 வயது மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது மகன்கள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், முதியவர் சிவகுமார் இன்று காலை 13வது மாடியில் இருந்து குதித்து அந்த முதியவர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், முதியவர் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.